June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வைக்கோலில் இருந்து ஸ்ட்ரா போர்டு தயாரித்தல்

நெற்பயிரை அறுவடை செய்யும் போது, அதிலிருந்து நமக்கு துணைப்பொருட்களாகக் கிடைப்பது வைக்கோல். பெரும்பாலும் இயந்திரங்களை கொண்டுதான் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு பண்டல், பண்டலாக இயந்திரங்களே உருட்டித் திரட்டி தயார் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக கால்நடை தீவனமாக எடுத்து கொள்ளப்பட்டு, மீதி மண்ணுக்கு உரமாக்கப்பட்டது.

தற்போது மாத்தியோசித்து, MDF பலகை களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்ய வாய்ப்பாக உள்ளது. வைக்கோலை புராசஸ் செய்து ஃபைப்பராக மாற்றி, சிறிய பெரிய அளவிலான சிலிககான் தூளாக மாற்றப்பட்டு தேவையான அளவில் வெட்டி எடுக்கப்பட்டு, பலகை தயார் செய்யப்படுகிறது. இவ்வகையான பலகைகள் லேசர் கட்டிங் செய்வதற்கும் ஆணி அடிப்பதற்கும் சுலபமானதாகும். வைக்கோல் பொதுவாக கதகதப்பான தன்மை கொண்டது என்பதால், ஈரப்பதத்தால் பலகைகள் உப்பிக் கொள்ளுவது தடுக்கப்படும். அதனால் தான் வைக்கோலில் இருந்து உருவாக்கப்படும் இந்த பலகைக்கு சர்வதேச அளவில் பெரிய வரவேற்பு உள்ளது. இவை இயற்கைக்கும், சுற்றுச் சூழலையும் பாதிக்காத ஓரு தொழில் இந்த வைக்கோல் பலகை ஸ்ட்ரா போர்டு தொழிற்சாலை அமைத்தால் பல லட்சம் விவசாயிகள் பயனடைவதோடு அவர்களது வாழ்வு மேம்பாடு அடையும் என்பதில் ஜயமில்லை

Spread the love