June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வைக்கோல் கட்டு விலை சரிவு

கிருஷ்ணகிரி, மே 5

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர், வெண்டரவள்ளி உள்ளிட்ட பகுதி விவசாயிகள், 5000க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள், மாடுகளுக்கு தீவனமாக ஆரணி, ஆற்காடு, செங்கம், தண்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, டெம்போக்களில் கொண்டு வரும் வைக்கோல் கட்டை, ரூ.250 முதல் ரூ.300 வரை வாங்கி வந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூரில் சுமார், 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்தாண்டில் போதியளவு மழை பெய்ததால், விவசாயிகள் இரண்டு பருவம் நெல் சாகுபடி செய்தனர். தற்போது இரண்டாம் பருவ நெல் விளைச்சல் கண்டு, அறுவடை செய்து வருகின்றனர். தற்போது, பாரூர் பெரிய ஏரியின் கீழ்பகுதியில் நெல் அறுவடை செய்யும் இடத்தில், ஒரு கட்டு வைக்கோல், ரூ.150 முதல் ரூ.180 வரை கிடைக்கின்றன. இதனால், இப்பகுதிகளில் பசுமாடு வளர்ப்போர் டிராக்டர், டெம்போக்களில் சென்று வைக்கோலை வாங்கி சேகரித்து வருகின்றனர்.

Spread the love