August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வோக்ஸ்வேகன் டி ராக் வினியோகம் துவக்கம்

புது தில்லி, மே 14

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2021 டி ராக் மாடலின் இந்திய வினியோகம் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டி ராக் மாடலை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. டி ராக் எஸ்யுவி மாடல் இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.

மேலும், இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி புதிய எஸ்யுவி மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் MQB பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் டி ராக் எஸ்யுவி 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 148 பியஹச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பி¼ள, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

Spread the love