June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

ஈரோடு, ஜூன் 21

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வருகை தந்தது. இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனையானது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. தக்காளி விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது. நேற்று கிருஷ்ணகிரி, ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து எப்போதும் இல்லாத அளவாக 30 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனையானது.

Spread the love