August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஷிப்டுகளை குறைக்க மாருதி நிறுவனம் திட்டம்

புது தில்லி, ஏப்.24

மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் குருகிராம், மானேசர் ஆலைகளில் ´ப்டுகளை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, நிறுவன தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, மாருதி நிறுவனம் தரப்பில் தகவல்கள் தெரியவந்துள்ளதாவது: கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்தால், வாகனங்களுக்கான தேவை குறையும் என, நிறுவனம் கருதுகிறது.மேலும் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக, ஆலைகளில் ´ப்டுகளை குறைத்து விடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்தன. ஏற்கனவே நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, கடந்த வாரம் தெரிவித்ததாவது: நீடித்த ஊரடங்குகள் தேவையை குறைப்பதாக அமையும் என்றும்; முகவர்கள் தங்களுடைய ஷோரூம்களை அடைத்துவிடும் பட்சத்தில், ஆலையை இயக்குவது என்பது இயலாத காரியமாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love