June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் விரைவில் அறிமுகம்?

புது தில்லி, ஏப்.27

ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பேபியா மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஸ்கோடா பேபியா புதிய தலைமுறை மாடல் உருவாகி வருகிறது. இந்த மாடலின் டிசைன் வரைபடங்கள் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன. நான்காவது தலைமுறை சூப்பர்மினி மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகிறது. வரைபடங்களின் படி புதிய ஸ்கோடா கார் ஆக்டேவியா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய வேரியண்ட்களை விட அளவில் பெரியதாக உள்ளது.

மேலும் இதன் நீலம், அகலம் மற்றும் உயரம் என காரின் வெளிப்புறம் முழுக்க முந்தைய மாடலை விட பெரியதாகி இருக்கிறது. இந்த காரின் உள்புறமும் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்சன் வழங்கப்படலாம். வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

Spread the love