சேலம், ஏப்.22
வடமாநில வியாபாரிகள் நேரடியாக வருகை தந்து கொள்முதல் செய்வதால், சேலத்தில், ஸ்டார்ச், ஜவ்வரிசி விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆந்திராவில், கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், இரவில் ஊரடங்கு, பல்வேறு கெடுபிடிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனை முழுமையாக
நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு கொள்முதல் செய்து வந்த, வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள், சேலம் சேகோசர்வ், மில்களில் நேரடி கொள்முதல் செய்கின்றனர். இதனால், ஜவ்வரிசி, ஸ்டார்ச்
விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ கொண்டது) ரூ.3,300க்கு விற்பனையானது, நேற்று, ரூ.400 உயர்ந்து, ரூ.3,700க்கு விற்பனையானது. ஸ்டார்ச், ரூ.2,440க்கு
விற்பனையானது, ரூ.205 உயர்ந்து, ரூ.2,645க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால், மரவள்ளி கிழங்கு விலை, டன்னுக்கு, ரூ.500 முதல் ரூ.1,000 வரை, தர அடிப்படையில் உயர்ந்துள்ளது. டன்,
ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையான நிலையில், ரூ.5,500 முதல் ரூ.8,000 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.