August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலையை அப்போலோ மருத்துவமனை உயர்த்தியது

ஹைதராபாத், மே 19

நாட்டில் கோவேக்சின், கோவிUல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், போதுமானதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவில் இருந்து டாக்டர் ரெட்டி லேப்ஸ் இறக்குமதி செய்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அரசு ஒப்புதல் பெற்று பயன்பாட்டு வந்துள்ளது.

இந் நிலையில் இந்த மருத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான பணியை டாக்டர் ரெட்டி லேப்ஸ் உடன் இணைந்து அப்போலோ மருத்துவமனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வேக்சினுக்கு 948 ரூபாய்+5% ஜிஎஸ்டி (மொத்தம் 995.40 ரூபாய்) என்ற விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், மக்களிடம் கொண்டு சேர்க்கும் அப்போலோ மருத்துவமனை ஸ்புட்னிக் வேக்சினுக்கு ரூ.1,250 என விலை நிர்ணயம் செய்துள்ளது.

ஸ்புட்னிக் வேக்சின் விலையாக 995.40 ரூபாயும், நிர்வாகக் கட்டணம் என 254.60 ரூபாயை சேர்ந்து மொத்தம் 1,250 ரூபாய்க்கு அப்போலோ மருத்துவமனை ஸ்புட்னிக் வேக்சின்-ஐ வழங்குகிறது. இது தற்போது சந்தையில் பயன்பாட்டில் இருக்கும் கோவேக்சின், கோவிUல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளை விடவும் விலை அதிகம் ஆகும்.

மேலும் ஸ்புட்னிக் வேக்சின்-ஐ பெற விரும்புவோர் கோ-வின் செயலி அல்லது இணையதளத்தில் புக் செய்துகொள்ள முடியும்.

Spread the love