திண்டுக்கல், ஜூலை 5
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரம், தாண்டிக்குடி கீழ்மலை ஸ்பைசஸ் காப்பி மற்றும் அவகோடா உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்டின் கீழ் உறுப்பினர்களாக சேர்க்கும் கூட்டம் நேற்று பெரியகுளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதிகள் இல்லாத கொடைக்கானல் தாலுகா, வெள்ளகவி ஊராட்சி பெரியூர் மற்றும் சின்னூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தாண்டிக்குடி கீழ்மலை ஸ்பைசஸ் காப்பி மற்றும் அவகேடா உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. விவசாயிகள் ஆர்வத்தோடு தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
Spread the love