சென்னை, ஏப்.28
முன்னணி பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களான ஹட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனம் வரிக்குப் பிந்தைய நிகரலாபம் கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இதுகுறித்து ஹட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச்சுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 4.92 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வட்டிகள், வரிகள், தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் இந்த காலகட்டத்தில் ரூ.784.49 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டை விட 40.41 சதம் அதிகமாகும்.
மேலும், கடந்த நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் முந்தைய நிதியாண்டை விட 119.42 சதம் அதிகரித்து ரூ.784.49 கோடியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில், முந்தைய நிதியாண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் வருவாய் 23.89 சதமும் வட்டிகள், வரிகள், தேய்மானத்துக்கு முந்தைய வருவாய் 66.56 சதமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.