June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக் இந்தியாவில் உற்பத்தி துவக்கம்

புது தில்லி, மே 6

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின் உற்பத்தி பணிகள் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின் உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ-வின் சக்கன் வாகன உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலை

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த பைக்கானது கேடிஎம் ட்யூக் 125 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் ஆகும். ஆகையால், இப்பைக்கில் கேடிஎம் ட்யூக் 125 பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே

எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 125சிசி திறன் கொண்டது. லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பியையும், 12 என்எம் டார்க்கையும்

வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் வாகன உற்பத்தி ஆலையில் ஸ்வர்ட்பிளன் 125 பைக் மட்டுமின்றி ஸ்வர்ட்பிளன் 250, விட்பிளன் 250, ஸ்வர்ட்பிளன் 401 மற்றும் விட்பிளன் 401 ஆகிய இருசக்கர வாகனங்களும்

உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஸ்வர்ட்பிளன் 125 பைக்குகளே ஐரோப்பிய சந்தைகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. ஆகையால்,

நம் நாட்டில் உற்பத்தியாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

Spread the love