August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஹானர் டேப் எக்ஸ் 7 சீன சந்தையில் அறிமுகம்

மும்பை, மே 10

ஹானர் டேப் எக்ஸ்7 சாதனம் கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பத்தில் இந்த சாதனம் வருகிறது. வைஃபை வேரியண்ட் அம்சத்தோடு சீனாவில் ஹை ஹானர் ஸ்டோர்களில் வாங்கலாம். மேலும் நிறுவனம் ஹானர் டேப் எக்ஸ்7 சர்வதேச சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த அசத்தலான சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:

மேஜிக் யூஐ 4.0 ஆதரவுடனான ஆண்ட்ராய்டு 10 அம்சத்துடன் இயக்கப்படுகிறது. இது 8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்¼ள அம்சம் மற்றும் 1280மீ800 பிக்சல் ரெசல்யூசன் ஆதரவோடு வருகிறது.

ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ பி22டி எஸ்ஓசி அம்சத்தோடு இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. அதேபோல் இதில் பின்புற கேமரா மற்றும் முன்புற ஒற்றை கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது. இதில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்புற கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது.

ஹானர் டேப் எக்ஸ்7 இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் ஒய்5., மைக்ரோ யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் இந்த டேப்லெட் 5100 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணிநேரம் மட்டுமே எடுக்கிறது. இதன் விலை குறித்து பார்க்கையில் இந்திய மதிப்புப்படி ரூ.10,300 ஆக இருக்கிறது. இது வைஃபை வேரியண்ட் ஆதரவோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு அம்சத்துடன் வருகிறது. அதேபோல் இதன் எல்டிஇ வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.13,700 ஆக இருக்கிறது.

Spread the love