May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஹானர் ப்ளே 5 சீரிஸ் மொபைல்கள் மே 18ம் தேதி அறிமுகமாகிறது

புதிய ப்ளே 5 ஸ்மார்ட்போன் வரிசையில் முதல் போனை வரும் மே-18 அன்று ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெய்போவில் இணையதள தகவலின்படி இரண்டு ஸ்மார்ட்போன்கள் குறித்து தெரியவந்துள்ளது. இவை ஹானர் ப்ளே 5 மற்றும் ஹானர் ப்ளே 5 ப்ரோ சாதனங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் தெளிவு கொண்ட ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 800 யூ சிப்செட் உடன் வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்பி குவாட் – கேமரா அமைப்பு பின்புறத்தில் இருக்கிறது. மேலும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில், 3800 எம்ஏஎச் பேட்டரி 66 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரியவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தான் டேப் எக்ஸ்7 சாதனத்தை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒரே வேரியண்டாக ஒற்றை வண்ணத்தில் இந்த டேப்ளட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

Spread the love