டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோஸ்பார்க் 7பி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 7 தொடரில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது இந்த வேரியண்டை டெக்னோஸ்பார்க் 7பி என அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 90ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 7பி எனப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த மொபைலின் அம்சங்கள் குறித்த டெக்னோ நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் எப்படி விற்பனை செய்யப்படவுள்ளது மற்றும் விலை விவரங்கள் இடம்பெறவில்லை.
எனினும் இந்த மொபைலின் விலை ரூ.10,000-த்துக்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆல்ப்ஸ் ப்ளூ, மேக்னட் பிளாக், ஸ்ப்ரூஸ் க்ரீன் மற்றும் சம்மர் மோஜிடோ வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் தெளிவு மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் டிஸ்ப்ளே இருக்கும். ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஓசி சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். அத்துடன் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.
இந்த மொபைலில் 16எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா மற்றும் முன்புறத்தில் 8எம்பி செல்ஃபீ கேமரா வசதி இருக்கிறது. அத்துடன் இரட்டை எல்இடி ஃபிளாஷ் வசதி இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் நைட் மற்றும் ஸ்மைல் ஸ்னாப்ஷாட் கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிக்காக கைரேகை ஸ்கேனர் வசதி உளள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் ஆகிய கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன.