July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஹெச்யுஎல் நிறுவனத்தின் லாபம் 13 சதம் உயர்வு

புது தில்லி, ஏப்.30

முன்னணி எஃப்எம்சிஜி துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 13 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹெச்யுஎல் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் விற்பனை நான்காவது காலாண்டில் 16 சதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக வீட்டு பராமரிப்பு பிரிவிலான வர்த்தகத்தில் நிறுவனம் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தக்கவைத்து வருகிறது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.2,190 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2019-20ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்த நிகர லாபமான ரூ.1,938 கோடியுடன் ஒப்பிடுகையில் 13 சதம் உயர்வாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.12,235 கோடியிலிருந்து ரூ.12,542 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.6,759 கோடியிலிருந்து ரூ.7,999 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் ரூ.40,415 கோடியிலிருந்து ரூ.47,438 கோடியாக உயர்ந்துள்ளதாக யஹச்யுஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது

Spread the love