August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

1.4.22 முதல் விதை பரிசோதனை கட்டணம் உயர்வு

விழுப்புரம், ஏப்.2

விழுப்புரம் மூத்த வேளாண்மை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விதை பரிசோதனை கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறினார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முதல் தளத்தில் விதை பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. வேளாண்மையின் உற்பத்திக்கு விதை முக்கிய இடுபொருளாகும். விதையின் தரத்தை அறிய விதைப் பரிசோதனை நிலையம் செயல்படுகிறது.

விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரககலப்பு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இவ்விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்படும் விதை மாதிரிகளை ஆய்வு செய்ய ஒரு விதை மாதிரிக்கான விதை பரிசோதனை கட்டணம் ஏப்ரல்-2022 1ம் தேதி முதல் ரூ.80/- (ரூபாய் எண்பது) ஆக உயர்ந்துள்ளது. ஓவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் விதையின் தரம் அறிய விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையம் விழுப்புரம், என்ற முகவரிக்கு அனுப்பி பகுப்பாய்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Spread the love