June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

1.50 கோடி கோவிட் தொற்று தடுப்பூசிகள் தமிழக அரசு கொள்முதல் செய்ய உத்தரவு

சென்னை, ஏப்.28

முதல்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசியை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.

மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தியாவிலேயே அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

கோவிட் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

Spread the love