September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

100 ஆண்டுகள் சேவையை வழங்கிவரும் டிஎம்பி வங்கி முன் உதாரணமாக திகழ்கிறது: அமைச்சர்

தூத்துக்குடி, செப்.13

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் வங்கி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டார்.

அதில் அமைச்சர் பேசியதாவது:

பொதுத்துறை நிறுவனங்களில் வங்கி சேவை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அனைத்து தொழில்களுக்கும் முக்கியமான பணங்கள் இங்கே கையாளப்படுவதால் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் வங்கிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளுக்கு இடையே தொழிலையும் வளர்த்து மக்களுக்கு உதவும் வகையிலும் வங்கி சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு அவ்வப்போது ஏற்படும் திருத்தங்கள், மாற்றங்களை உள்வாங்கி மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை இவ்வங்கி எட்டியுள்ளது.

இவ்வாறாக 100 ஆண்டுகளாக ஒரே நிலைப்பாட்டில் சிறந்த நடவடிக்கையால், நல்ல நடத்தையால் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தமிழகத்தில் முன் உதாரணமாக திகழ்கிறது. தொடர்ந்து பல்வேறு மக்கள் சேவையாற்றி 41 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டு கொண்டாடும் வங்கிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இன்னும் பல நூறாண்டுகள் மக்கள் சேவையில் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என பேசினார். மேலும், தற்போது வங்கி துறை நவீன வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. பிரதமரின் ஸ்ருஜன் திட்டம் மூலம் சிறு தொழில்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Spread the love