October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

100 சத பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை விமான அமைச்சகம் இயக்க அனுமதி

புது தில்லி, அக்.13

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து விமான சேவை மீண்டும் தொடங்கியது. அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 33 சத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் செப்டம்பர் மாதம் 72.5 சத பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 80 சதமாக அதிகரிக்கப்பட்டது.

இருந்தாலும் கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது கடந்த ஜூன் மாதம் 50 சதமாக குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 65 சதம், 72.5 சதம் என அதிகரிக்கப்பட்டது.

இந் நிலையில் அக்.18 முதல் 100 சதவீத பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love