May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

100 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விநியோகித்தது பிபிசிஎல்

மும்பை, ஏப்.20

கோவிட் தொற்று சிகிச்சையின்போது அளிப்பதற்காக 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) விநியோகிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் கடந்த ஒரு மாதமாக கோவிட் தொற்றின் 2ம் பரவல் தீவிரமாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் தீவிர கோவிட் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்க வேண்டிய ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆனால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கோவிட் தொற்றுக்கான சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் சுமார்100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை விலையில்லாமல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விநியோகிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் விநியோகப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய எண்ணெய் நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Spread the love