October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர், அக்.13

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்வு கூட்டரங்கில்; சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித் தொகைக்கான ஆணைமாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள 81 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை மாவட்ட குழு ஆய்வு செய்ததில் 69 தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குமாற்றுத்திறனாளிக்கான மாதந்திர உதவித் தொகைரூ.1000/- வழங்க மாவட்ட ஆட்சியரால் ஆணை வழங்கப்பட்டது.

Spread the love