January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர், மே 20

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியதுடன், தடுப்பூசியை வாங்க சர்வதேச அளவிலான டெண்டருக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வியாழக்கிழமை முதல் தடுப்பூசி போடப்படும் என்றும், அத்திட்டத்தை திருப்பூரில் (மே 20) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

Spread the love