August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2டிஜி தடுப்பு மருந்து நாட்டில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: டிஆர்டிஓ தகவல்

புது தில்லி, மே 10

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக்கூடிய, 2டிஜி என்ற மருந்து, ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் செய்தியாவது: கோவிட் தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்மாஸ் எனப்படும், நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டிஆர்டிஓ ஆகியவை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த மருந்தை தயாரித்துள்ளன. 2டிஜி எனப்படும், 2 டி ஆக்சி டி குளுக்கோஸ் என்ற இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த, டிசிஜிஐ எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, டிஆர்டிஓ திட்ட இயக்குநரும், இந்த தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானியுமான, சுதிர் சந்தானா தெரிவித்துள்ளதாவது:

பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும் என்றும், இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்படத் துவங்கும் என்றார். வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, அதை செயலிழக்க செய்யும். இந்த தடுப்பு மருந்தால், வேகமாக குணமடைவதுடன், ஆக்சிஜன் தேவை குறையும். அடுத்த சில வாரங்களில் அல்லது அதிகபட்சம், ஒரு மாதத்தில், இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

Spread the love