October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2வது காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ரூ.9,624 கோடி லாபம் ஈட்டியது

மும்பை, அக்.9

நாட்டின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், இரண்டாவது காலாண்டில் ரூ.9,624 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.46,867 கோடியாக இருந்தது. இது, 2020 செப்டம்பர் காலாண்டில் ஈட்டிய வருமானம் ரூ.40,135 கோடியுடன் ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.8,433 கோடியிலிருந்து 14.1 சதம் வளர்ச்சி கண்டு ரூ.9,624 கோடியைத் தொட்டுள்ளது. மேலும், இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.7 வழங்கவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love