புது தில்லி, ஏப்.28
சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த கேமரா சென்சாரை சாம்சங் உற்பத்தி செய்யும் என்றும் இது முதன்முதலில் சியோமி ஸ்மார்ட்போனில் தான் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை 108 எம்பி கேமராவுடன் சியோமி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் அறிமுகமான எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலிலும் இந்த சென்சார் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 200 எம்பி கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 108 எம்பி கேமரா சென்சார்கள் தற்போது பிரீமியம் மட்டுமின்றி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங்கின் 200 எம்பி சென்சார் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது 0.34 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கும் என்றும் இது 1/1.37 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகபட்சம் 16கே வீடியோ ரெக்கார்டிங், 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.