May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2021 சுசூகி ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்தது

புது தில்லி, ஏப்.30

சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் அண்மையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. தற்போது இந்த ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 101 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட யூனிட்களுடன் பின்புற சீட் கவுல் வழங்கப்பட்டது. இதே சலுகை அடுத்தக்கட்ட யூனிட்களுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய ஹயபுசா மோட்டார்சைக்கிள் ஏப்.26ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ.16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ.2.65 லட்சம் அதிகம் ஆகும். புது மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன் மற்றும் மேம்பட்ட டிசைன் கொண்டுள்ளது.

2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பியஹச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

Spread the love