January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் 532.86 லட்சம் டன் நெல் கொள்முதல்

புது தில்லி, ஜன.10

கடந்த ஆண்டுகளைப் போலவே 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட கொள்முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் (09.01.2022 வரை) 532.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,04,441.45 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 64.07 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் 10.01.2022 நிலவரப்படி 7,03,388 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,378.64 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 1,01,218 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2020-21ல் இதே காலத்தில் 44,90,222 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.8,477.54 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 8,52,152 விவசாயிகள் பயனடைந்தனர்.

Spread the love