October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2022ம் ஆண்டுக்குள் 5 நாடுகள் பிட்காயினை அரசு நாணயமாக ஏற்கும்: வல்லுனர்கள்

மும்பை, அக்.13

பிட்காயின் என்பது தவிர்க்க முடியாத முக்கிய முதலீடாக மாறியுள்ளது. அண்மையில், எல் சால்வடோர் நாட்டில் அமெரிக்க டாலருக்கு இணையாகப் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் வரும் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகில் 5 நாடுகளில் பிட்காயினை அதிகார்ப்பூரவ் நாணயமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிட்மெக்ஸ் என்ற முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ-வான அலெக்ஸ் உலகில் பல முன்னணி நாடுகள் கிரிப்டோகரன்சியை அடுத்தடுத்து ஆதரித்து வரும் நிலையில், பிட்காயின் பயன்பாட்டு அளவு பெரிய அளவில் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் உலக நாடுகளில் பிட்காயினை ஏற்கும் மனப்பான்மை அதிகரிக்கும் வேளையில் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகில் 5 நாடுகளில் பிட்காயினை அதிகார்ப்பூரவ் நாணயமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜேபி மோர்கன் சேஸ் அண்மையில் தனது முதலீட்டாளர்களுக்கு முதலீடு பழக்கம் குறித்து அனுப்பிய முக்கியமான கடிதத்தில் உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் பாதிப்புகளைக் குறைக்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைக் கைவிட்டுப் பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Spread the love