760.94 லட்சம் மெ. டன் நெல்லும் கொள்முதல்
புது தில்லி, மே 2
மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், குஜராத், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ராபி சந்தைப் பருவம் 2022-23-ல் மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.
01.05.2022 வரை, 161.95 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.32,633.71 கோடியுடன் 14.70 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்,
2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் மத்திய தொகுப்பின் கீழ் நெல் கொள்முதல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீராக நடைபெற்று வருகிறது.
01.05.2022 வரை, 760.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் (காரீப் பயிர் 751.49 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ராபி பயிர் 9.45 லட்சம் மெட்ரிக் டன் உட்பட) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.1,49,144.23 கோடியுடன்,109.58 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில், 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 33,40,314 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ரூ.6547.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 5,00,057 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.