May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2023ல் தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் நஷ்டத்திலிருந்து மீண்டெழும்: கிரிசில் தகவல்

மும்பை, மே 3

2023ம் ஆண்டில் தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் நஷ்டத்தில் இருந்து மீளும் என கிரிசில் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் திறக்கப்பட்டன. தியேட்டர்கள் செயல்படத் தொடங்கி 25 சத அளவுக்கு பார்வையாளர்கள் வரத்தொடங்கி இருந்த சமயத்தில் மீண்டும் 2ம் அலை தொடங்கிவிட்டதால், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

மகராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கு எங்கும் புதிய படங்கள் வெளியாகவில்லை. தியேட்டர் வருமானத்தில் மஹாராஷ்டிராவின் பங்கு அதிகம் என்பதால் அம்மாநிலத்தில் இதர நகரங்களிலும், படத்தை வெளியிட விரும்பவில்லை. மேலும், மகாராஷ்ட்ரா மட்டுமன்றி, நாடு முழுவதுமே கடந்த நிதி ஆண்டில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதேபோல நடப்பு நிதி ஆண்டிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கும் என அந்த ஆய்வில் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு பராமரிப்பு, விரிவாக்க திட்டங்களுக்கான செலவுகளை குறைத்தது என பலவகையில் நஷ்டத்தை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இறுதியில் நஷ்டத்தையே சந்தித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள். இவற்றை தவிர ஓடிடிகளின் வருகையால் வீட்டில் இருந்தே மக்கள் படம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கோவிட் அச்சம் முழுமையாக குறைவது மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெளியாவது மட்டுமே, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மீண்டெழுவதற்கு முக்கியமான வழிகள் என கிரிசில் தெரிவித்திருக்கிறது.

Spread the love