October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2047க்குள் நாட்டில் 100 நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமல்: மத்திய அரசு

மும்பை, அக்.8

நாட்டில் 2047ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நாட்டின் முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மெட்ரோ திட்டங்களும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.

2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களை இணைக்கும் வகையில், மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா ­சங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தற்போது கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது 2047-ஆம் ஆண்டுக்குள் 10 மடங்கு அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Spread the love