January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வார் ரூம் நாமக்கல் ஆட்சியர் ஆய்வு செய்தார்

நாமக்கல், ஜன.10

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூடுதல் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை அறைக்கு (வார் ரூம்) 1077 04286-299135 04286-299137 04286-299139 8220402437 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் சிகிச்சை வசதி தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவைப்படும் உதவிகளை போன் மூலம் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றார்கள்.

இந்த ஆய்வின் போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை விவரங்கள் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிட விவரங்கள் நோய்த்தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் ஆகியவை பதிவேடுகளில் பதிந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். மேலும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளின் உடல் நிலை குறித்து சம்மந்தப்பட்ட நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Spread the love