May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2,500 படுக்கை கொண்ட புதிய கோவிட் வார்டு செயில் நிறுவனம் உருவாக்கம்

புது தில்லி, மே 3

நாட்டின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், சுமார் 2500 படுக்கைகளைக் கொண்ட மருத்துவச் சிகிச்சை மையத்தைப் புதிதாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

செயில் நிறுவனம் நாடு முழுவதும் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள் இருக்கும் நிலையில், இத்தொழிற்சாலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான மருத்துவமனையை ஏற்கனவே கோவிட் சிகிச்சை மையமாக மாற்றியுள்ள நிலையில், தற்போது புதிதாக 2,500 படுக்கை கொண்ட கொரோனா வார்டு-ஐ அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செயில், ஏற்கனவே பிலாய் (சத்தீஸ்கர்), போகாரோ (ஜார்க்கண்ட்), ரூர்கேலா (ஒடிசா), துர்காபூர் மற்றும் பர்ன்பூர் (மேற்கு வங்கம்) ஆகிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலை மருத்துவமனையை கோவிட் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 2,500 படுக்கைகள் கொண்டு சிகிச்சை மையத்திற்கு ஸ்டீல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாகப் பைப் மூலம் ஆக்சிஜன் வாயுவை அளிக்க முடிவு செய்துள்ளது. பொதுவாகத் திரவ ஆக்சிஜனை வாயுவாக மாற்றி நோயாளிகளுக்கு மாற்றி அளிக்கப்படும், ஆனால் தற்போது ஸ்டீல் அத்தாரிட்டி நேரடியாக ஆக்சிஜன் வாயுவை நோயாளிகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தற்போது அறிவித்துள்ள 2500 படுக்கைகளைப் பல்வேறு கட்டங்களாக மாநில அரசுடன் இணைந்து மேலே குறிப்பிட்டு உள்ள 5 மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைத்து அதன் பின்பு படிப்படியாக இதன் எண்ணிக்கை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது 3 மாநிலத்தில் இருக்கும் செயில் தொழிற்சாலை மருத்துவமனையில் 3000 படுக்கைகள் உள்ளது. இதில் 45 சத படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்காக அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love