June 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

3 உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட்கள் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டம்

மும்பை, மே 6

அசத்தல் அம்சங்கள் நிறைந்த டேப்லெட் மாடல்களை சியோமி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

புதிய எம்ஐ பேட் டேப்லெட் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அண்மையில் அறிவித்தார்.

இதே தகவலை சியோமி நிறுவன இயக்குனர் வாங் டெங் தாமஸ் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சியோமி நிறுவனம் மூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல்கள் நபு, எனுமா மற்றும் எலிசன் எனும் குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிய தகவல்கள் MIUI12.5 சிஸ்டம் செயலிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியோமி உயர் ரக டேப்லெட் மாடல்கள் 4ஜி எல்இடி, 5ஜி வசதி, 2560×1600 பிக்சல் WQXGA டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 யஹர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் 10.97 இன்ச் பேனல் கொண்ட மாடல் 8720 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் எனுமா மற்றும் எலிஷ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865, 865 பிளஸ் அல்லது 870 பிராசஸர் வழங்கப்படலாம். நபு மாடலில் ஸ்னாப்டிராகன் 855, 855 பிளஸ் அல்லது 860 பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Spread the love