May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை, மே 3

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வடக்கு உள் கர்நாடகா முதல் குமரி வரை, 1 கி.மீ., உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், வரும், 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பிளவக்கல், வத்திராயிருப்பில், 7 செ.மீ., மழை பதிவானது. எருமைப்பட்டி, ஆத்தூர், கீரனுார், வால்பாறை, தொண்டி, 3; விருதுநகர், சாத்துார், உத்தமபாளையம், ஊட்டி, பேச்சிப்பாறையில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love