May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

3 புதிய நிறங்களில் வருகிறது ஹைனெஸ் சிபி350 பைக் ஹோண்டா அறிமுகம் செய்கிறது

ஹைனெஸ் சிபி350 பைக்கை 3 புதிய நிறங்களில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சமீபத்தில் தான் ஹைனெஸ் சிபி350 மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. சந்தையில் 350சிசி பைக்குகளுக்கு போட்டி அதிகமாக உள்ளதாலும், 350சிசி பைக்குகளின் விற்பனை அதிகமாக இருப்பதாலும் ஹோண்டா நிறுவனம் இந்தப் பைக்கிற்கு புதிய நிறங்களை அளிக்கவுள்ளதாக தெரிகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கிய பைக் ஹைனெஸ் சிபி350 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பைக்கிற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து மேட் பியர் மோரியன் பிளாக், மேட் ஜீன் ப்ளூ மெட்டாலிக் மற்றும் கேன்டீ க்ரோமோஸ்பியர் ரெட் ஆகிய 3 நிறங்களில் ஜப்பானில் இந்தப் பைக் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அதேவேளையில், ஜப்பானில் இந்தப் பைக் ஜிபி350 எனும் பெயரில் பயணிக்கவுள்ளது. புதிய நிறங்களைத் தவிர்த்து வேறு மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்தப் பைக்கில் 348.36சிசி திறனை வெளியேற்றக் கூடிய 4 ஸ்ட்ரோக், எஸ்ஐ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.8 பிஎச்பி பவர் திறனையும், 30என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

அத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் சிஸ்டம் வசதிகள் உள்ளன. இப்பைக்கின்டிஎல்எஸ் வேரியண்ட் ரூ.1,89,905 என்ற விலையிலும், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்ரூ.1,95,905 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

தற்போது ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கானது கருப்பு, சிவப்பு, வெள்ளி, நீலம், சாம்பல் மற்றும் பச்சை என ஆறு நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Spread the love