May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

3,000 மஞ்சள் மூட்டைகள் ரூ.1.60 கோடிக்கு ஏலம்

தர்மபுரி, மே 4

அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்திருந்த, 3,000 மஞ்சள் மூட்டைகள், ரூ.1.60 கோடிக்கு விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடக்கும். அதன்படி நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள், 3,000 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், விரலி மஞ்சள் குவிண்டால், ரூ.7,699 முதல் ரூ.8,802 வரையும், குண்டு மஞ்சள் குவிண்டால், ரூ.7,395 முதல் ரூ.8,301 வரை விற்பனையானது. 3,000 மூட்டைகள், ரூ.1.60 கோடிக்கு விற்பனையானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love