புது தில்லி, மே 3
விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
விவோ எக்ஸ்60டி ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. விவோ எக்ஸ்60, எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் புது விவோ ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது.
புதிய விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் V2120A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும், இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த சாதனத்தின் மற்ற அம்சங்களை பொருத்தவரை விவோ எக்ஸ்60டி மாடலில் 6.59 இன்ச் புல் யஹச்டி மற்றும் அமோல்ட் டிஸ்ப்¼ள, பன்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 1100 5ஜி பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 1.0 வழங்கப்படும் என தெரிகிறது.
கேமரா பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4300 எம்ஏயஹச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை 6, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் தெரிகிறது.