May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4ஜி டேட்டா பதிவிறக்க வேகம் ஏப்ரல் மாதத்தில் ஜியோ முதலிடம்

4ஜி தரவு பதிவிறக்க வேகத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

கணக்கீட்டு மாதத்தில் ஜியோ நிறுவனத்தின் சராசரி தரவுகள் பதிவிறக்க வேகம் 20.1 எம்பிபிஎஸ் ஆக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் 4ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளை பதிவிறக்கம் செய்வதில் ஜியோ நிறுவனம் 20.1எம்பிபிஎஸ் சராசரி வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள வோடஃபோன் நிறுவனத்தின் சராசரி தரவிறக்க வேகத்துடன் ஒப்பிடும்போது ஜியோவின் வேகம் ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

ஏப்ரலில் வோடஃபோன் சராசரி பதிவிறக்க வேகம் 7எம்பிபிஎஸ்-ஆக மட்டுமே இருந்தது. அதேவேளையில், பதிவேற்ற வேகத்தில் இந்நிறுவனம் 6.7 எம்பிபிஎஸ் உடன் ஏனைய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றது.

அடுத்தபடியாக, ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் கடந்த ஏப்ரலில் முறையே 5.8எம்பிபிஎஸ் மற்றும் 5 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.

அதேவேளையில் ஐடியா நிறுவனத்தின் சராசரி பதிவேற்ற வேகம் 6.1 எம்பிபிஎஸ்-ஆகவும், ஜியோவின் வேகம் 4.2 எம்பிபிஎஸ்-ஆகவும், ஏர்டெல் பதிவேற்ற வேகம் 3.9 எம்பிபிஎஸ்-ஆகவும் இருந்தது.

வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்ட போதிலும் இன்னமும் அந்நிறுவனங்களின் நெட்வொர்க் புள்ளிவிவரங்கள் தனித்தனியாகவே வெளியிடப்பட்டு வருகிறது.

Spread the love