January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4வது காலாண்டில் எச்டிஎஃப்சி நிறுவனம் நிகரலாபம் 31 சதம் அதிகரிப்பு

புது தில்லி, மே 10

2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் எச்டிஎஃப்சி நிறுவனம் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகரலாபமாக ரூ.5,669 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எச்டிஎஃசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.5,669 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டில் நிறுவனம் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.4,342 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதம் அதிகமாகும்.

மேலும், இந்நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் 42 சதம் வளர்ச்சி கண்டு ரூ.3,180 கோடியைத் தொட்டுள்ளது. இந்த லாபம் 2019-20ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.2,233 கோடியாக காணப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் வழங்கிய தனிநபர் கடன் 60 சதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

குறைந்த மற்றும் அதிக விலை கொண்ட வீடுகளுக்கான கடன் கணக்கீட்டு காலாண்டில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாம், நிகர வட்டி வருமானம் ரூ3,564 கோடியிலிருந்து 14 சதவீதம் அதிகரித்து ரூ.4,065 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 1.99 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 1.98 சதவீதமாக குறைந்துள்ளது என எச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love