July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4வது காலாண்டில் எம்பசிஸ் நிறுவனம் ரூ.317 கோடி லாபம் ஈட்டியது

பெங்களூரு, மே 15

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த எம்பசிஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.317 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்பாசிஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21வது நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் 7.5 சதம் வளர்ச்சி கண்டு ரூ.2,524.2 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,346.1 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.353.2 கோடியிலிருந்து 10.2 சதம் சரிவடைந்து ரூ.316.9 கோடியானது. கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.8,843.5 கோடியிலிருந்து 2.7 சதம் உயர்ந்து ரூ.9,722.3 கோடியாகவும், நிகரலாபம் ரூ.1,184.8 கோடியிலிருந்து 2.7 சதம் அதிகரித்து ரூ.1,216.8 கோடியாகவும் இருந்தது.

அது மட்டமல்லாமல், கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.65 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக எம்பசிஸ் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love