June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4வது காலாண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் 36 சதம் அதிகரிப்பு

புது தில்லி, மே 5

முன்னணி தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,589 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோடாக் மஹிந்திரா வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கி செயல்பாடுள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.12,084.71 கோடியிலிருந்து ரூ.16,175.87 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நிகர லாபம் ரூ.1,905 கோடியிலிருந்து 36 சதம் உயர்ந்து ரூ.2,589 கோடியைத் தொட்டுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட லாபம் ரூ.1,267 கோடியிலிருந்து 33 சதம் உயர்ந்து ரூ.1,682 கோடியை எட்டியுள்ளது. தனிப்பட்ட வருவாய் ரூ.8,294.07 கோடியிலிருந்து ரூ.8,398.39 கோடியாக அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், மதிப்பீட்டு காலாண்டில் நிகர வட்டி வருமானமும் ரூ.3,560 கோடியிலிருந்து 8 சதம் உயர்ந்து ரூ.3,843 கோடியைத் தொட்டுள்ளது. 2021 மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 2.25 சதத்திலிருந்து 3.22 சதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 0.71 சதத்திலிருந்து 1.23 சதமாக அதிகரித்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி அந்த செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love