August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4வது காலாண்டில் கோல்கேட்-பாமாலிவ் ரூ.315 கோடி நிகர லாபம் ஈட்டியது

புது தில்லி, மே 18

முன்னணி நுகர்பொருள்கள் துறையைச் சேர்ந்த கோல்கேட்-பாமாலிவ் இந்தியா நிறுவனம் 4-வது காலாண்டில் ரூ.314.6 கோடி நிகரலாபத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோல்கேட்-பாமாலிவ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,275.01 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-2020 4-வது காலாண்டு விற்பனையான ரூ.1,062.35 கோடியுடன் ஒப்பிடும்போது 20.2 சதம் அதிகம்.

மேலும், நிகரலாபம் ரூ.204.15 கோடியிலிருந்து 54.1 சதம் உயர்ந்து ரூ.314.6 கோடியைத் தொட்டது என கோல்கேட்-பாமாலிவ் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கோல்கேட்-பாமாலிவ் பங்கின் விலை 1.84 சதம் உயர்ந்து ரூ.1,596.00-இல் நிலைத்தது.

Spread the love