May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4 உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடல்ஹோண்டா மோட்டார் நிறுவனம் அறிவிப்பு

புது தில்லி, ஏப்.30

தன்னுடைய நான்கு தயாரிப்பு ஆலைகளை, மே 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடுவதாக, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் பரவல் மற்றும் அது சம்பந்தமான தடை உத்தரவுகள் ஆகியவை காரணமாக, தன்னுடைய நான்கு உற்பத்தி ஆலைகளை தற்காலிகமாக மூடுவதாக ஹோண்டா மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், உற்பத்தியை நிறுத்தி வைக்கும் இந்த காலகட்டத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகள் மற்றும் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை பொறுத்து, உற்பத்தி குறித்த அடுத்த முடிவுகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ஹோண்டா அலுவலக ஊழியர்களும், வணிகத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், வீட்டிலிருந்து பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு ஹரியானா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன.

Spread the love