September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.13

நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் இன்று கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வரும் 15ம் தேதி கன மழை பெய்யும்.

வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். எனவே, வங்கக் கடலின் வடமேற்கு, வட ஆந்திர கடலோரம் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், மேற்கு வங்கம், ஒடிசா கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love