May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

44எம்பி செல்ஃபீ ஷூட்டருடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21 5ஜி ஸமார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வரும் மே 6ம் தேதி ஃபிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் ஆகிய இணையதளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை அந்த இணையதளங்களில் பெற முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஆர்க்டிக் ஒயிட், சன்செட் டாஸ்ல் மற்றும் டஸ்க் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

இந்தஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டிஆர்+ பிளஸ் தெளிவு, 1080×2404 பிக்சல் துல்லியம், 800 nits பிரைட்நஸ் வசதி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கும்.

இந்த மொபைலில் மீடியாடெக் டைமன்சிட்டி 800U புராசஸருடன் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் இருக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.29,990 ஆகவும், இதன் 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.31,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 44எம்பி செல்ஃபீ ஷூட்டர் இடம்பெற்றுள்ளது. கேமரா

இதில்4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றுள்ளது.

Spread the love