August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

5ஜி அலைக்கற்றையை பயன்படுத்த இந்தியாவில் 4 கோடி பேர் தயார்

புது தில்லி, மே 14

நாட்டில் 5ஜி அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து எரிக்சன் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சேவையை, டிஜிட்டல் சேவைகளுடன் வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 50 சத கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும், வெறும் 5ஜி இணைப்பு எனில், 10 சதம் அளவுக்கே கூடுதலாக செலுத்த விரும்புவதாகவும், எரிக்சன் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 5ஜி சேவை குறித்து, 26 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகளை சேகரித்துள்ளது, எரிக்சன் நிறுவனம். அதில், உலகின் பல நாடுகள், டிஜிட்டல் சேவைகளுடன் கூடிய, 5ஜி இணைப்புக்கு, 20-30 சதம் கூடுதல் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில், 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், முதல் ஆண்டில் மட்டும், 4 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இந்த சேவையை பெற தயாராக உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கையில், 5ஜி போனை வைத்துக் கொண்டு, 4ஜி சேவை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையில், 22 சதமாக இருக்கிறது என எரிக்சன் தெரிவித்துள்ளது.

Spread the love