January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்திற்கும், கோவிட் பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: தொலைத்தொடர்பு துறை விளக்கம்

புது தில்லி, மே 20

5ஜி செல்பேசி கோபுரங்களின் சோதனையால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவியிருப்பதாக தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாக தொலைத் தொடர்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இது குறித்து தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொவிட்-19 தொற்றின் பரவலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற புரளிகளுக்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. மேலும் ஐந்தாவது தலைமுறை இணைப்பின் சோதனை இன்னும் இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இதுபோன்ற கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை.

செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும், அயனிகளை உருவாக்காத ரேடியோ அலை வரிசையில் மிகக் குறைந்த அளவிலான ஆற்றலே இருப்பதால், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிரணுக்களில் இதனால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எனினும் செல்பேசிக் கோபுரங்கள் பாதுகாப்பு வரம்பிற்கும் அதிகமாக ரேடியோ அலைகளை வெளியேற்றுவதாக சந்தேகம் இருந்தால், https://tarangsanchar.gov.in/emfportal என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது ஐயங்களை தெரிவிக்கலாம்.

Spread the love