January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

5ஜி அலைக்கற்றை பரிசோதனை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகலாம்: அமெரிக்கா

வாஷிங்டன், மே 13

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாதது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும் என அமெரிக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகம் அண்மையில், ரிலையன்ஸ் ஜியோ பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல்.’ உள்ளிட்ட தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.

மேலும் இந்த நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சீன நிறுவனத்துக்கும் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாததால் அந்நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறிந்தோம். அது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். மேலும், இந்த விசயத்தில் ஒன்றை மட்டும் எங்களால் கூற முடியும். சீன அரசால் கட்டுப்படுத்தப்படும் சாதனங்களுடன் கூடிய நெட்வொர்க்குகள் நிறுவப்பட்டால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து நாங்களும் கவலைப்படுவது உண்மை தான் என்றார். மேலும், சோதிக்கப்படாத மற்றும் நம்பத்தகாத சீன தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love