January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

5ஜி கன்வெர்டிபில் லேப்டாப் ஏசர் நிறுவனம் அறிமுகம்

சென்னை, ஏப்.23

5ஜி வசதி கொண்ட முதல் கன்வெர்டிபில் லேப்டாப் மாடலை ஏசர் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

ஏசர் நிறுவனம் இந்தியாவில் ஸ்பின் 7 கன்வெர்டிபில் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் கன்வெர்டிபில் லேப்டாப் ஆகும். இது எம்எம்வேவ் மற்றும் சப்-6 ஜிகாயஹர்ட்ஸ் பிரீக்வன்சிக்களை சப்போர்ட் செய்யும்.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:

14 இன்ச் FHD 1920×1080 IPS டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx Gen 2 5G பிராசஸர், 8 ஜிபி LPDDR4x மற்றும் 512 ஜிபி UFS மெமரி, விண்டோஸ் 10 ப்ரோ 64-பிட், 720p வெப்கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

மெல்லிய மக்னீசியம் – அலுமினியம் அலாய் பாடி கொண்டிருக்கும் புது லேப்டாப் 15.9 எம்எம் தடிமனாகவும், 1.4 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஏசர் ஸ்பின் 7 மாடல் 360 டிகிரி ஹின்ஜ் கொண்டிருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை சுழல செய்து டேப்லெட் அல்லடு டென்ட் மோட் விதங்களில் பயன்படுத்த முடியும்.

ஏசர் ஸ்பின் 7 கன்வெர்டிபில் லேப்டாப் விலை ரூ. 1,34,999 ஆகும். இது ஏசர் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர், ஏசர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Spread the love